1. ஓடை எவ்வாறு ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார் ?
விடை : ஓடை கற்களில் உருண்டும் ,தவழ்ந்தும் ,நெளிந்தும் , சலசல, என்ற ஒலி எழுப்பியபடி ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார் .
2. ஓடை எழுப்பும் ஒலிக்கு எதனை உவமையாகக் கவிஞர் வாணிதாசன் கூறுகிறார் ?
விடை : ஓடை எழுப்பும் ஒலிக்கு சிறந்த சொற்களைப் பேசும் பெண்கள் பாடும் வள்ளைப் பாட்டின் சிறப்புக்கேற்ப முழங்கும் முழவையொலியை உவமையாகக் கவிஞர் வாணிதாசன் கூறுகிறார்
3. வாணிதாசன் இயற்றிய நூல்கள் யாவை ?
விடை : தமிழச்சி , கொடிமுல்லை , தொடுவானம் , எழிலோவியம் , குழந்தை இலக்கியம்
4. ஓடையின் பயன்கள் யாவை ?
விடை : நன்செய் ,புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தனது பயிர்களைச் செழிக்கச் செய்கிறது அவ்வாறு விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது .
5. ஓடையின் கொடையைப் பற்றி வாணிதாசன் கூறுவது யாது ?
விடை : நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படுமாறு இடையறாது ஒடித்
தன் உழைப்பை கொடையாகத் தருகிறது .
Comments