இயல் -2 கோணக்காத்துப் பாடல்



குறுவினா :

   

1. கப்பல் கவிழ்ந்ததற்குக் காரணமாகக்  கோணக்காத்துப் பாடல் கூறுவது யாவை ?

விடை : கடலில் விரைந்து வந்த கப்பல் எமனைப் போல வந்த பெருமழையினாலும் சுழல் காற்றினாலும் கவிழ்ந்தது .

2. புயல் காற்றினால் தொண்டைமான் நாட்டில் ஏற்பட்ட அழிவு யாது ?

விடை : தொண்டைமான் நாட்டில் சிறப்புக்காக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிந்து விழுந்தது .

3. கொல்லிமலை பற்றிப் பாடல் கூறும் செய்தி யாது ?

விடை : சித்தர்கள் வாழும் கொல்லிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புயல் அடித்தது .

சிறுவினா :



1. புயல் காற்றினால் மரங்களுக்கு ஏற்பட்ட நிலைகளாகப் பாடல் குறிப்பிடும் கருத்துக்கள் யாவை ?

விடை : ( Ⅰ)  வாங்கல் என்னும் ஊரில் அழகாக வைக்கப்பட்ட  தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின .
                (Ⅱ)  அளவில்லாத காங்கேய  நாட்டின் மேட்டுப் பகுதியில் வளர்ந்திருந்த பருத்திச்  செடிகள் எல்லாம் சிதைவு அடைந்து வெறும் குச்சிகளாக மாறின .
                (Ⅲ) தொண்டைமான் நாட்டின் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிந்து விழுந்தன .

2. கோணக்காற்றால் வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் யாவை ?

விடை : திரண்டு எழுந்த மேகங்களால் உருவான காற்று வேகமாக அடித்ததால் பெரிய வீடுகளின் கூரைகள் எல்லாம் மொத்தமாக பிரிந்து சரிந்தன . அழகிய சுவர்கள் உடைய மாடி வீடுகள் அடியோடு விழுந்தன .
 

Comments