![]() |
வாணிதாசன் |
ஆசிரியர் குறிப்பு :
பெயர் : வாணிதாசன்
இயற்பெயர் : அரங்கசாமி என்ற எத்திராசலு.
பெற்றோர் : அரங்க திருக்காமு , துளசியம்மாள்.
ஊர் : வில்லியனூர்-புதுவை .
காலம் : 22.7.1915 முதல் 7.6.1974 .
அறிந்த மொழிகள் : தமிழ் , ஆங்கிலம் , பிரெஞ்சு ,தெலுங்கு .
சிறப்பு பெயர்கள் : பாவலர்மணி , தமிழகத்தின் வோர்ஸ்ட்வொர்த் ,
பாவலர் மன்னன், கவிஞரேறு .
பணி : தமிழாசிரியராக பணியாற்றினார்
இயற்றிய நூல்கள் : தமிழச்சி , கொடிமுல்லை , தொடுவானம் , எழிலோவியம் , குழந்தை இலக்கியம் .
*இவருக்கு பிரெஞ்சு அரசு செவாலியர் விருது வழங்கி சிறப்பித்துள்ளது .
*இவர் பாரதிதாசனின் மாணவர் ஆவார்
Comments